பிரபல திரைப்பட பாடலாசிரியர் பிறைசூடன் காலமானார்.

திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன் (வயது 65) உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார்.

கவிஞர், பாடலாசிரியர் பிறைசூடன் (65) உடல் நலக்குறைவால் காலமானார். சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் உடல் நலக்குறைவால் கவிஞர் பிறைசூடன் காலமானார்.

திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தை சேர்ந்தவர் கவிஞர் பிறைசூடன். 1985ல் வெளியான சிறை படத்தில் இடம்பெற்ற ராசாத்தி ரோசாப்பூ பாடல் மூலம் அறிமுகமானவர்.  இதுவரை 400 திரைப்படங்களில் 1400-க்கும் மேற்பட்ட பாடல்கள்,5000 பக்திப் பாடல்களும் இயற்றியுள்ளார்.

தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருதை பெற்றவர். தென்னிந்தியத் திரைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் “கலைச்செல்வம்” விருதையும் , கபிலர் விருதையும் பெற்றுள்ளார். இவர் சில காலமாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்த நிலையில் பிறைசூடன் நெசப்பாக்கத்தில் உள்ள தமது இல்லத்தில் காலமானார். இந்த தகவலை அவரது மகன் உறுதி செய்துள்ளார்