மும்பை

டிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள்  பயன்படுத்தியதாகப் பதியப்பட்ட வழக்கில் அவருடைய ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை இரவு ஒரு சொகுசுக் கப்பலில் போதைப்பொருட்களுடன் கேளிக்கை விருந்து நடந்துள்ளது.   அதே கப்பலில் பயணம் செய்த போதைப் பொருட்கள் தடுப்பு அதிகாரிகள் நடிகர் ஷாருக்கான் மகன் உள்ளிட்டோரைக் கைது செய்தனர்.  இவர்களை காவல்துறை கண்காணிப்பில் எடுக்கப்பட்டு நேற்று வரை விசாரணை நடந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர் .

இந்த வழக்கில் நேற்றைய தினம் ஆர்யன் கான் உள்ளிட்டோரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் ஜாமீன் கோரி மனு செய்திருந்தார்.  இந்த மனு மீதான விசாரணை இன்று மதியம் 12 மணிக்கு தொடங்கியது.  அதன் பிறகு தொடர்ச்சியாக நடைபெற்ற விசாரணையில் அவருக்கு ஜாமீன் கிடைக்கும் என எதிர்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில் தற்போது மும்பை நீதிமன்றம் ஆர்யன் கான் ஜாமீன் மனுவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.   இந்த வழக்கில் வெளிநாட்டில் உள்ள நபர்களுக்கும் தொடர்பு உள்ளதால் ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கினால் விசாரணையில் பாதிப்பு ஏற்படலாம் என்னும் வாதத்தின் அடிப்படையில் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.  தற்போது ஆர்யன் காண் உள்ளிட்டோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.