சென்னை

பிரபல தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகர் சேஷு  இன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

விஜய் தொலைக்காட்சியின் “லொள்ளு சபா” என்கிற நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நகைச்சுவை நடிகர் சேஷு  தற்போது சுமார் 60 வயதாகும் இவர் தனது தனித்துவமான நகைச்சுவை பாணியைக் கொண்டு ரசிகர்களைக் கவர்ந்தார்.

விஜய் தொலைக்காட்சியைத் தொடர்ந்து, ஏ1, வடக்குப்பட்டி ராமசாமி உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் சேஷு நடித்துள்ளார்.  நடிகர் சேஷு மாரடைப்பு காரணமாக, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் 10 நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு அவருக்கு வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.  இன்று சிகிச்சை பலனின்றி சேஷு உயிரிழந்தார். சேஷுவின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.