இயற்கை, தானியங்கள் சாகுபடியை ஊக்குவிக்கும் கர்நாடகா!!

Must read

பெங்களூரு:

அரிசிக்கும் கோதுமைக்கும் மாற்றான ஆரோக்கிய உணவாக தானிய வகை உணவுகளை ஊக்குவிக்கும் வகையில் கர்நாடகா தேசிய வர்த்தக கண்காட்சியை நடத்துகிறது.

 

ஆர்கானிக்ஸ் (இயற்கை) மற்றும் மில்லட்ஸ் (தானிய) 2017 என்ற இந்த கண்காட்சி வரும் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை பெங்களூருவில் நடக்கிறது. கர்நாடகா மாநில வேளாண் துறை மற்றும் வேளாண் பொருள் பதப்படுத்தும் மற்றும் ஏற்றுமதி கழக நிறுவன, வேளாண் பல்கலைக்கழகம், ஜெய்விக் கிரிஸ்க் சொசைட்டியும் இணைந்து இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

‘‘கண்காட்சி மூலம் விவசாயிகள், விற்பனையாளர், வாங்குவோர், விரைந்து விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் நிறுவனங்களுக்கு இடையே தொடர்பை ஏற்படுத்தும் வகையில் இது நடத்தப்படுகிறது. மில்லட்ஸ் (தானியங்கள்) போன்றவை பருவ சூழ்நிலைக்கு ஏற்ற நெகிழ்வு தன்மை கொண்டது. எந்த பருவ நிலையிலும் இவை வளரக்கூடியது. அதனால் இந்த கண்காட்சி மூலம் கம்பு உள்ளிட்ட தானியங்களை சா குபடி செய்ய ஊக்குவிக்கப்படும்’’ என்று மாநில வேளாண் துறை அமைச்சர் கிருஷ்ணா பைரே கவுடா தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில்,‘‘ தானியங்களில் அதிக அளவு ஊட்டச்சத்து நிறைந்துள்ளது. கடந்த 50 ஆண் டுகளாக தானிய சாகுபடி சரிவை சந்தித்துள்ளது. சிறு தானிய உற்பத்தி 76 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. ஆனால் தற்போது சிறு தானிய உற்பத்தியில் வேளாண் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டம் நாடு முழுவதும் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த வகையில் தான் கண்காட்சியும் நடத்தப்படுகிறது.

விவசாயிகள் மத்தியில் தானிய சாகுபடி ஊக்குவிக்கப்படும். விற்பனைக்கு வழிவகை உள்ளது என்பதை விவசாயிகளுக்கு எடுத்த காட்ட திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் நூறு ஏக்கரில் இயற்கை விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.

566 விவசாய குழுக்கள் மாநிலம் முழுவதும் இயற்கை சாகுபடியில் ஈ டுபட்டுள்ளனர். இவர்கள் இயற்கை சாகுபடி செய்வதை ஒரு ஆண்டு பூர்த்தி செய்த பிறகு ‘இயற்கை விவசாயிகள்’ என்று சான்றிதழ் அளிக்கப்படும். விவசாய குழுக்கள் இந்த கண்காட்சியில் கலந்து கொள்கின்றனர்’’ என்றார்.

More articles

Latest article