டில்லி

நேற்று இரவு சுமார்1 மணி நேரம் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் முடங்கி மீண்டும் செயல்படத் தொடங்கி உள்ளது. 

உலகெங்கும் உள்ள மக்கள் சமூக வலைத்தளங்களான முகநூல் , இன்ஸ்டாகிராம், எக்ஸ் வலைத்தளம், வாட்ஸ்அப் போன்றவற்றைப் பயன்படுத்தி வருகின்றனர்., தங்களுடைய புகைப்படங்கள், வீடியோக்கள் உள்பட பல்வேறு தகவல்களையும் இவற்றில் பகிர்ந்து வருகின்றனர்.

நேற்றிரௌவ் 8.30 மணி அளவில் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தக் கூடிய முகநூல் , இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் சேவை திடீரென பாதிக்கப்பட்டது..மேலும் அவற்றின் செயலிகளும் செயல்படவில்லை. எனவே,இணைய வசதிகள் கிடைக்காமல் பயனர்கள் அவதியடைந்தனர்.

தங்கள் சேவைகளை அணுகுவதில் மக்கள் சிக்கலை எதிர்கொள்வதை நாங்கள் அறிவதாகவும் இதனைச் சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் மெட்டா நிறுவன செய்தித் தொடர்பாளர் விளக்கம் அளித்தார்.

ஏறக்குறைய 1 மணி நேரத்திற்கும் கூடுதலாக முடங்கிய முகநூல்,,இன்ஸ்டாகிராம் மீண்டும் செயல்படத் தொடங்கியது. பயனர்கள் இதனால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.