டெல்லி: தீபாவளி வரை இலவச அரிசி திட்டம் நீட்டிப்பு, தடுப்பூசி தட்டுப்பாட்டு விரைவில் தீரும் என பிரதமர் மோடி மக்களிடைய உரையாற்றி வருகிறார்.

கொரோனா 2வது அலை நாடு முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டதுடன், ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்து தடுப்பாடு, நோயாளிகளுக்கு படுக்கை தட்டுப்பாடு, தடுப்பூசி தட்டுப்பாடு என பல இன்னல்களால் நாட்டு மக்கள் கடந்த 2 மாதங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தற்போது தொற்று பரவல் ஓரளவுக்கு குறைந்து வருகிறது. தையடுத்து,  பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று மாலை 5மணி அளவில்  நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.  அப்போது அவர் கூறியதாவது,

உலகில் பெரும்பாலான நாடுகள் கொரோனா பெருந்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனாவுக்கு எதிரான போரில் உலக அரங்கில் இந்தியா முன்களத்தில் நின்று போராடி வருகிறது. 100 ஆண்டுகளில் இல்லாத அளவில் மிகப்பெரும் தொற்று மக்களை பாதித்துள்ளது. மருத்துவமனைகளில் ஐசியு படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஆக்சிஜன் தேவை நாட்டில் ஏற்பட்டது. அனைத்து கட்டமைப்புகளையும் பயன்படுத்தி ஆக்சிஜனை அனைத்து பகுதிகளுக்கு கொண்டு சென்றுள்ளோம். மக்களை காப்பாறுவதற்காக நாட்டின் முப்படைகளையும் பயன்படுத்தினோம்.  வெளிநாடுகளில் இருந்து தேவையான மருந்துகள் அனைத்தையும் கொண்டு வந்துள்ளோம்.

கொரோனா நமது மிகப்பெரிய எதிரி; அதை வீழ்த்த நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி தான். தடுப்பூசியை இதற்கு முன் இல்லாத வகையில் விரைவாக உற்பத்தி செய்து பயன்படுத்துகிறோம். எப்போதும் கிடைக்கும் வகையில் தடுப்பூசி உற்பத்தி நிரந்திரமாக இருக்கும் என்று கூறினார். மற்ற நாடுகள் போல இந்தியாவும் கடினமான சூழலில் போராடி வருகிறது. இந்தப் போராட்டத்தில் நமக்குப் பிரியமான ஏராளமானோரை இழந்துள்ளோம்.

ஏப்ரல், மே மாதங்களிலிருந்து ஆக்ஸிஜன் தேவை கடுமையாக அதிகரித்தது. ஆக்ஸிஜனைக் கொண்டு வர விமானம், ரயில் என அனைத்துப் போக்குவரத்து சேவைகளும் பயன்படுத்தப்பட்டன. நாட்டின் எந்த மூலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டாலும் அது நாட்டின் எந்தவொரு பகுதிக்கும் சென்றடைய ஏற்பாடுகள் செய்யப்பட்டன.  ஆக்ஸிஜன் உற்பத்தியும் இதுவரை இல்லாத வகையில் கடுமையாக அதிகரிக்கப்பட்டன.

கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் தடுப்பூசி போடும் பணிகள் பாதிக்கப்பட்டன. சில நிறுவனங்கள் மட்டுமே தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் மேற்கொண்டு வருகின்றன. நாட்டு மக்களுக்கு இதுவரை 24 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசி தேவை ஏற்பட்டதையடுத்து, தடுப்பூசி உற்பத்தியை இதுவரை இல்லாத வகையில் அதிகரித்துள்ளோம். இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தி இல்லையென்றால் நிலைமையை யோசித்துப் பாருங்கள். இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் பலரது உயிரைக் காப்பாற்றியுள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட இரண்டு தடுப்பூசிகள் நடைமுறைக்கு வந்துள்ளன. கரோனா தடுப்பூசி உற்பத்தியில் எந்த நாட்டைக் காட்டிலும் நாம் பின்தங்கிய நிலையில் இல்லை. நம் விஞ்ஞானிகள் இதை நிரூபித்துக் காட்டிவிட்டார்கள்.

தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அரசு அனைத்து உதவிகளையும் வழங்கியது. வரும் நாள்களில் தடுப்பூசிகள் விநியோகம் அதிகரிக்கப்படும். மேலும் 3 தடுப்பூசிகள் இறுதிக் கட்ட நிலையில் உள்ளன. அவை விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளனதடுப்பூசியாக அல்லாமல் பதில் மூக்கின் வழி மருந்தை உட்கொள்ளும் வகையில் தடுப்பு மருந்து வரவுள்ளது கொரோனா தடுப்பூசிகளுக்கான தட்டுப்பாடு விரைவில் தீரும்.

மே மாதம் முதல் தடுப்பூசி கொள்கையில் மாநிலங்களுக்கு சதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 7 நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிக்கும் பணியில் உள்ளன. 3 நிறுவனங்கள் தங்களுடைய பணிகளை முடிக்கும் நிலையில் உள்ளன. தடுப்பூசி விஷயத்தில் மத்திய அரசே முடிவெடுக்கும். மாநிலங்களின் கோரிக்கையின்படி தடுப்பூசி முழுவதும் இலவசமாக வழங்கப்படும். இனி கொரோனா தடுப்பூசிக்காக மாநிலங்கள் செலவு செய்ய வேண்டியதில்லை.  தடுப்பூசி விநியோகத்திற்கான மாநில அரசுகளின் 25% பங்கையும் மத்திய அரசே ஏற்கும்., இது வரும் இரண்டு வாரங்களில் செயல்படுத்தப்படும். வ

ரவிருக்கும் இரண்டு வாரங்களில் புதிய வழிகாட்டுதல் களின்படி மாநிலம் மற்றும் மையம் இரண்டும் செயல்பட வேண்டும். ஜூன் 21 முதல் ஜூன் 18 வரை, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்தப்படும். மாநில அரசுகள் இனி தனியாக தடுப்பூசியை கொள்முதல் செய்ய வேண்டியதில்லை. தனியாருக்கு போக மீதமுள்ள 75% தடுப்பூசிகளை மத்திய அரசே விலைக்கு வாங்கி மாநிலங்களுக்கு அளிக்கும்.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு,  பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அண்ணா திட்டத்தின்படி, இலவச ரேசன் பொருட்கள் வழங்கப்படும். இந்த சலுகை தீபாவளி வரை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 80 கோடி ஏழைகளுக்கு இலவச ரேஷன் வழங்கப்படும் என்றார்.