ஜெனீவா: சீனா தயாரித்துள்ள 3 முதல் 17வயதுடைய குழந்தைகளுக்கான சைனோவேக் கொரோனா தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் அவசரகைல பயன்பாட்டுக்கு அங்கீகாரம் வழங்கி உள்ளது.

உலக நாடுகளை புரட்டிப்போட்டுள்ள கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து உருவாக்கப்பட்டது என குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், அந்நாடு தொற்று பரவலை கட்டுப்படுத்தும் தடுப்பூசி தயாரிக்கும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சீன மக்களுக்கு அந்நாடு தயாரித்துள்ள சைனோபார்ம்,  சைனோவாக் தடுப்பூசிக்கு  உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்கியதைத் தொடர்ந்து 18வயதுக்கு மேற்பட்ட நாட்டு மக்களுக்கு  அதை செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இந்திய உள்பட பெரும்பாலான பல்வேறு நாடுகளில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தான் தடுப்பூசி வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. சில இடங்களில் மட்டுமே 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், பலரும் குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் சீனாவில் உள்ள சைனோவேக் எனும் நிறுவனம் தயாரித்துள்ள ‘கொரோனாவேக்’ எனும் தடுப்பூசி குழந்தைகளுக்கு செலுத்துவது குறித்து ஆய்வு நடத்தி வந்தது. இந்த ஆய்வு முடிவுகளில் நல்ல முடிவுகள் கிடைத்துள்ளதாகவும், இந்த தடுப்பூசியை இரண்டு கட்டங்களாக 3 முதல் 17 வயதிற்குட்பட்ட நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களிடம் சோதனை செய்ததாகவும், இந்த சோதனையில் இது நம்பகமானது மற்றும் செயல்திறன் மிக்கது என்பதை உறுதிப்படுத்தி உள்ளது என  அந்நிறுவனத்தின் தலைவர் யின் வெயிடாங் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, 3வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பயன்படுத்த அனுமதி கோரி  சீன நிறுவம்  உலக சுகாதார அமைப்பிடம் தரவுகள் தாக்கல் செய்தது. இதை ஆய்வு செய்த உலக சுகாதார அமைப்பு, குழந்தைகளுக்கு ‘கொரோனாவேக்’  தடுப்பூசி அவசர கால பயன்பாட்டுக்கு  ஒப்புதல் வழங்கி உள்ளது.

தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்த WHO, அதன் வலைத்தளத்தின்படி, சினோவாக்கின் தடுப்பூசி – ‘கொரோனாவாக்’ என்பது குறைந்த வள அமைப்புகளுக்கு ஏற்றது. இரண்டு முதல் நான்கு வார இடைவெளியில், 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயது வந்தவர்களுக்கு பயன்படுத்த பரிந்துரைக்கிறது. தடுப்பூசி செயல்திறன் முடிவுகள், தடுப்பூசி தடுப்பூசி போட்டவர்களில் 51% பேருக்கு கொரோனா அறிகுறி நோயைத் தடுத்தது மற்றும் கடுமையான COVID-19 மற்றும் 100% ஆய்வு செய்யப்பட்ட மக்களில், தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள்,  மருத்துவமனையில் சேர்ப்பதைத் தடுத்தது என தெரிவித்து உள்ளது.