சென்னை: முன்னாள்  அதிமுக அமைச்சர் புலவர் இந்திர குமாரி காலமானார். அவருக்கு வயது 73.

1991 முதல் 1996 வரை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ஆர்.இந்திரகுமாரி சென்னையில் நேற்று காலமானார்.  மாரடைப்பு காரணமாக,  சென்னையில் உள்ள அப்போலோ தனியார் மருத்துவமனையில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில், அவருக்கும் மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்தார். இவருக்கு கணவர் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

இந்திரகுமாரி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு, அவருக்கு சிறை தண்டனையும் விதிக்கப்பட்ட நிலையில், கடந்த  2006ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தார். அதன்பிறகு அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த நிலையில், வயது முதிர்வு காரணமாகவும், இருதய நோய் காரணமாகவும்   சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்திரகுமாரி உடல் அடையாறு காந்தி நகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது என அவரின் குடும்பத்தார் தெரிவித்துள்ளார்.

மறைந்த இந்திரகுமாரி மறைவுக்கு அரசியல் கட்சிகள் இரங்கல் தெரிவித்துஉள்ளன. பல அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு 5 ஆண்டுகள் சிறை! ஊழல் வழக்கில் 23ஆண்டுகளுக்கு பிறகு அதிரடி தீர்ப்பு…