தியேட்டரில் ரிலீஸ் செய்யும் முடிவுடன் தற்போது ’என் பெயர் ஆனந்தன்’ என்ற படம் அறிவிப்பு வெளி வந்துள்ளது. இதில் சந்தோஷ் பிரதாப், அதுல்யா ரவி ஜோடியாக நடித்திருக்கின்றனர். ஜேஸ் பிரங்க்ளின் இசை அமைத்திருக்கிறார். மோனோ ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கி உள்ளார். தணிக்கையில் இப்படத்துக்கு யு சான்றிதழ் கொடுத்து படத்தை பாராட்டி இருக்கி றார்கள்.


ஏற்கனவே விஜய்யின் மாஸ்டர், ஜெகமே தந்திரம், சூரரைப் போற்று போன்ற பல படங்கள் தியேட்டரில் ரிலீஸ் செய்ய முடியாமல் முடங்கிடக்கிறது. இன்று அறிவிப்பு வெளியிட்ட தமிழக அரசு படப்பிடிப்புகளுக்கு அனுமதி தந்திருக் கிறது. தியேட்டர் திறப்புக்கு அனுமதி தரப்படவில்லை. எப்போது திறக்கப் படும் என்றும் தெரியாது. இதனால் ’சூரரைப்போற்று’ படத்தை தியேட்டரில் தான் ரிலீஸ் செய்வது என்ற முடிவுடன் இருந்த சூர்யா தனது முடிவை மாற்றிக் கொண்டு ஒடிடி தளத்தில் ரிலீஸ் செய்கி றார் .
என் பெயர் ஆனந்தன் தியேட்டரில் தான் படம் ரிலீஸ் என்று எடுத்த முடிவில் உறுதியாக இருப்பார்களா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.’