ஒடிடியில் ஏற்கனவே ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், வரலட்சுமியின் டேனி, கீர்த்தி சுரேஷின் பெண்குயின் படங்கள் வெளியானது. அதன்பிறகு பல படங்கள் ஒடிடிக்கு கியூவில் நிற்கிறது. ஆனால் அவர்கள் வாங்கிய பாடுதான் இல்லை. ஒடிடி அதிபர்களின் எண்ண மெல்லாம் விஜய் அஜீத், சூர்யா போன்ற பெரிய படங்கள் மீதுதான் இருக்கிறது. சமீபத்தில் சூர்யாவின் சூரரைப்போற்று ஒடிடிக்கு வந்திருக்கிறது. தற்போது நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் ஒடிடிக்கு வரவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.


இப்படத்தில் முதன்முறையாக நயன்தாரா அம்மன் வேடம் ஏற்று நடித்திருக்கிறார். இது அவருக்கும் புதுசு. ரசிகர்களுக்கும் புதுசு. ஆர்.ஜே.பாலாஜி படத்தை இயக்கி உள்ளார். தற்போது ஒடிடி தளத்துடன் பேச்சு நடத்தி வருகிறது படத்யாரிப்பு நிறுவனம் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவுள்ளது.