புதுச்சேரி:
தேர்தல் நடத்தை விதிகளை மீறியது தொடர்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது.
இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி கிரண்பேடி. துணிச்சல் மிக்கவர். மத்தியில் பாரதிய ஜனதா அரசு பதவி ஏற்றதும்  கிரண்பேடியை  புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு ஆளுனராக  நியமனம் செய்தது.
இவர் ஆளுநராக புதுச்சேரிக்கு வந்ததுமுதன் அவர் குறித்து சர்ச்சைகளும் வளர தொடங்கி உள்ளது. மாநில அரசை கலந்தாலோசிக்காமல் தனி ஆவர்த்தனம் செய்வதாக மாநில அரசு குற்றம் சாட்டி வந்தது.
இந்நிலையில் புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தல் கடந்த 19ந்தேதி நடைபெற்றது. முதல்வர் நாராயணசாமி அந்த தொகுதி வேட்பாளராக போட்டியிட்டார்.

கிரண்பேடி
கிரண்பேடி

தேர்தல் நேரத்தில், தேர்தல் அதிகாரிகள் சிலரை வரழைத்து ஆளுநர் கிரண்பேடி ஆலோசனை நடத்தியதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது, அதிகாரிகளை ஆளுநர் அழைத்து ஆலோசனை நடத்திய தவறு என்று புதுச்சேரி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயற்குழு உறுப்பினர் டி.முருகன் தேர்தல் ஆணையத்தி டம் புகார்  கூறினார்.
இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு  ஆளுநர்  கிரண்பேடியிடம் தேர்தல் ஆணையம் கேள்வி எழுப்பியது. அதறகு கிரண்பேடி தரப்பில் விளக்கம் தரப்பட்டது. ஆனால், ஆளுநர் தரப்பில் இருந்த அளிக்கப்பட்ட  திருப்தியாக இல்லை என்று தேர்தல் ஆணையம் அவரை எச்சரித்துள்ளது.
இனி வருங்காலங்களில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் நிகழாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கிரண்பேடிக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.