உத்தரபிரதேசம் :
தேர்வு கட்டணம் கட்ட பணம் வங்கியிலிருந்து எடுக்க முடியாததால் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 8ந்தேதி முதல் பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து, பழைய பணத்தை கொடுத்து புதிய பணம் மாற்றவும், புதிய பணம் பெறவும் மக்கள் நாயாய் அலைநது வருகிறார்கள்.
வங்கிகளிலும், ஏடிஎம் இயந்திரங்களிலும் போதுமான அளவுக்கு பணம் இல்லாததால் நடுத்தர மற்றும் ஏழை மக்களின் அன்றாட வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. பணம் எடுக்க வங்கிகளில்  காத்து கிடந்தவர்களில் 40க்கும் மேற்பட்டவர்கள் மரணத்தை தழுவி உள்ளனர்.
hang
இந்நிலையில் தேர்வு எழுத பணம் கட்ட முடியாததால் மாணவன் ஒருவர் பரிதாபமாக தற்கொலை செய்துகொண்டார்.
உத்தரபிரதேச மாநிலம் , மாவை பூருஷ்க் என்ற கிராமத்தில் வசித்துவருபவர் சுரேஷ். 18 வயதான வாலிபர்.  இவர் அங்குள்ள கலைக்கல்லுரியில் பி.எஸ்.சி இரண்டாமாண்டு படித்து வருகிறார்.
கல்லூரியில் வர இருக்கும் செமஸ்டர் தேர்வுக்கான கட்டணம் இதுவரை கட்டவில்லை. இதனால் ஹால் தர மாட்டார்கள் என்பதால், கடந்த ஒரு வாரமாக வங்கி வாசலில் கால்கடுக்க பலமுறை நின்று பார்த்தார். ஆனால், அவரால் பணம் எடுக்க முடியவில்லை.
இதனால் மனமுடைந்த சுரேஷ் செய்வதறியாது திகைத்தார். மன உளைச்சலுக்கு ஆளான சுரேஷ் கடந்த செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சுரேஷின் தற்கொலை அந்த பகுதி மக்களிடையே  அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது தற்கொலையைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட வங்கியின் மீது அவருடைய உறவினர்கள் கற்களை எறிந்து போராட்டம் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.