நோட்டு செல்லாது: நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை! ராகுல் வலியுறுத்தல்

Must read

டில்லி,
த்திய அரசின் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை செய்ய வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார்.
கடந்த 8ந்தேதி  பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததன் பின்னணியில் முறைகேடு நடைபெற்று உள்ளது. எனவே அதுகுறித்து விரிவான விசாரணை நடைத்த வேண்டும். ஆகவே,  நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.
mps
ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது பிரதமர் மோடி மேற்கொண்ட “உலகின் மிகப்பெரிய முன்யோசனை இல்லாத நிதி சார்ந்த நடவடிக்கை’ என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
டில்லி பாராளுமன்ற வளத்தில் நேற்று மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ், சமாஜவாதி, பகுஜன் சமாஜ், திரிணமூல் காங்கிரஸ், அதிமுக, திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் பங்கேற்றனர்.
அப்போது பேசிய ராகுல்காந்தி, ரூபாய் நோட்டுகள் தொடர்பாக மத்திய அரசு எடுத்த நடவடிக்கையைக் கண்டித்து பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் இங்கு கூடி போராட்டம் நடத்தி வருகிறோம்.
இதுபோன்ற நிதி சார்ந்த நடவடிக்கையை பிரதமர்  எதற்காக எடுத்தார்? ஆனால்   இந்த பணம் செல்லாது என்ற விவகாரம் தனது தொழில்துறை நண்பர்களுக்கும், பாஜக தலைவர்களுக்கும் முன்கூட்டியே தெரிய வந்துள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கு நாடாளுமன்றத்தில் பிரதமர் பதில் அளிக்க வேண்டும் என்றார்.
மேலும், பிரதமரின் செயல் “உலகிலேயே முன்யோசனை எதுவும் இல்லாமல் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய நிதி சார்ந்த நடவடிக்கை’ ஆகும். இது தொடர்பாக அவர் யாரையும் கலந்தாலோசிக்கவில்லை. நிதியமைச்சர், மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகருக்குக் கூட இது குறித்துத் தெரியவில்லை என்றார்.
ஆனால், ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு வெளிவருவதற்கு சில நாள்களுக்கு முன்பே பல வங்கிகளில் டெபாசிட் தொகை இதுவரை  இல்லாத வகையில் அதிகரித்து உள்ளது.

மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநில பாஜகவினருக்கும், மோடியின் தொழில்துறை நண்பர்களுக்கும் இந்த அறிவிப்பு குறித்து முன்பே தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால் இந்த விஷயம் மத்திய நிதி அமைச்சருக்குத்தான் தெரிவிக்கப்படவில்லை. எனவேதான் அவர் காங்கிரஸை குறைகூறி வருகிறார் என்றார்.
பிரதமர் நாடாளுமன்றம் வந்து, எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டுமென்றும் இங்குள்ள அனைத்து  எம்.பி.க்களும்  வலியுறுத்தி வருகிறோம். ஆனால், பிரதமர் நாடாளுமன்றத்துக்கு வந்து விளக்க மளிக்க பயப்படுகிறார்.
ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிக்கப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் ஏதோவொரு ஊழல் இருப்ப தாகவே நாங்கள் கருதுகிறோம். எனவே, இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
காங்கிரஸ் கட்சி உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளுமே கருப்புப் பணத்துக்கும், ஊழலுக்கும் எதிராகப் போராடித் தான் வருகின்றன. ஆனால், இப்போது கேள்வி என்னவென்றால், கருப்புப் பண ஒழிப்பு என்ற பெயரில் ஏன் பல கோடி மக்களை பிரதமர் துன்புறுத்தி வருகிறார்? என்பதுதான்.
இந்திய பொருளாதாரத்தில்  மிகப்பெரிய பாதிப்பை மோடி ஏற்படுத்திவிட்டார். விவசாயிகள், தொழிளாளர்கள் என சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாங்கள் இங்கு நடத்தும் போராட்டம் நாட்டில் உள்ள கோடிக்கணக்கான ஏழை மக்களின் வேதனைக் குரலின் எதிரொலி; அவர்களின் பிரதிநிதிகளாகவே இந்தப் போராட்டத்தை எம்.பி.க்களாகிய நாங்கள் நடத்துகிறோம் என்றார்.
இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article