கொரோனா அதிகரிப்பு : புதுச்சேரியில் ஜனவரி 31 வரை கல்வி நிலையங்கள் மூடல்

Must read

புதுச்சேரி

கொரோனா பரவல் அதிகரிப்பால் புதுச்சேரியில் ஜனவரி 31 வரை அனைத்து கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நாடெங்கும் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இது கொரோனா மூன்றாம் அலை பரவல் என நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.  இதையொட்டி நாடெங்கும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தினசரி கொரோனா தொற்று 2000 ஐ தாண்டி உள்ளது.  இது அங்குள்ள மக்களுக்கு கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.   ஏற்கனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1 முதல் 9 ஆம் வகுப்புக்கள் வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் புதுவை அமைச்சர் நமச்சிவாயம்,

“ஏற்கனவே புதுச்சேரியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக,1-9 ஆம் வகுப்புகள் வரை ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது 10,11,12 ஆம் வகுப்புகளுக்கும் மற்றும் கல்லூரிகளுக்கும் ஜனவரி 31 வரை விடுமுறை வழங்கப்படுகிறது”

என அறிவித்துள்ளார்.

More articles

Latest article