டில்லி

நாடெங்கும் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை சரிந்துள்ளது.

ஒமிக்ரான் பரவல் காரணமாக நாடெங்கும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 2,8,018 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி  மொத்தம் 3,7+,18,271 ஆகி உள்ளது.    இதுவரை 3,53,94,982 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இன்று காலை நிலவரப்படி 17,36,628 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இந்த பரவலைத் தடுக்க நாடெங்கும் உள்ள பல மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி ஊரடங்குகளும் அமலில் உள்ளன.  கொரோனா அச்சுறுத்தலால் பலர் பயணம் செய்வதை தவிர்த்து வருகின்றனர். 

இதனால் பல மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விவிற்பனை குறைந்துள்ளது.  இதன்படி இந்த மாதத்தில் முதல் 15 நாட்கள் அதாவது ஜனவரி 1 முதல் 15 ஆம் தேதி வரை   கடந்த மாதம் இதே கால கட்டத்தை விட 14.1% சரிந்துள்ளது.  இதில் மொத்த எரிபொருள் விற்பனையில் டீசல் 40% உள்ளது.    

ஆனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையாமல் அதே விலையில் உள்ளன.