சென்னை

மிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்குச் சொந்தமான ரூ.36.3 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.

சமீபத்தில் அமலாக்கத் துறையினர் லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை தொடர்புடைய கல்லல் குரூப் பவுண்டேஷன் உள்பட 8 இடங்களில் சோதனை நடத்தினர். சென்னை மட்டுமின்றி பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் முடிவில், உதயநிதி அறக்கட்டளையின் சார்பில், வழக்கறிஞரை அழைத்து அமலாக்கத் துறை விளக்கங்களைப் பெற்றது.

இந்த விளக்கத்தின் அடிப்படையில், அமலாக்கத் துறை பல்வேறு ஆவணங்களைக் கைப்பற்றியது. கல்லல் குரூப் பவுண்டேஷனுக்கு சொந்தமான ரூ.36.3 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளை முடக்கியிருப்பதாகவும், வங்கிக் கணக்கில் இருந்த ரூ.34.7 லட்சம் ரூபாயைக் கைப்பற்றியிருப்பதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அமலாக்கத் துறையின் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

“கடந்த 25.5.2023 அன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்குச் சொந்தமான கல்லல் குரூப் பவுண்டேஷனில் நடத்தப்பட்ட சோதனைகளின் அடிப்படையில், ரூ.36.3 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும், வங்கிக் கணக்கில் இருந்த ரூ.34.7 லட்சம் ரூபாயும் கைப்பற்றப்பட்டுள்ளது”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.