ரூர்

மிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கைதை முன்னிட்டு கரூரில் பல்வேறு பகுதிகளில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

அமலாக்கத்துறை சோதனையை அடுத்து இன்று அதிகாலை சென்னை பசுமை வழிச்சாலை வீட்டிலிருந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக அழைத்துச் செல்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர் எந்த வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் இதுவரை உறுதியான தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை.

இதையொட்டி சட்ட வல்லுநர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வீட்டில் அவசர ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  , அமைச்சர் செந்தில் பாலாஜி கைது எதிரொலியாகக் கரூரின் பல்வேறு இடங்களில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தயார் நிலையில் இருக்க மாவட்ட எஸ்.பி. சுந்தரவதனம் உத்தரவிட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள சென்னை, ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் கூடுதல் சி.ஆர்.பி.எப் வீரர்கள் மற்றும் தமிழக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.