சென்னை

மிழக சுகாதாரச் செயலர் ராதாகிருஷ்ணன் ஒமிக்ரான் பரவல் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் உருமாறிய திரிபான ஒமிக்ரான் வைரஸ் உலகெங்கும் வேகமாகப் பரவி வருகிறது.   இது இந்தியாவிலும் அதிகம் காணப்படுகிறது.  இதையொட்டி நாடெங்கும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.   அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

தமிழக சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் நேற்று சென்னை தேனாம்பேட்டை டி எம் எஸ் வளாகத்தில் உள்ள கட்டளை ஆய்வு மையத்தை ஆய்வு செய்தார்.  பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ராதாகிருஷ்ணன், ”தமிழகத்தில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டோரில் சுமார் 55 லட்சம் பேர் முதல் டோஸ் தடுப்பூசி கூட ப் ஓட்டுக் கொள்ளாமல் உள்ளனர்.   அவர்கள் அவசியம் தடுப்பூசி  போட்டுக் கொள்ள வேண்டும்.

அதேவேளையில் 15 முதல் 18 வயதான சிறார்களுக்குத் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.  இதுவரை 80% சிறார்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.   ஒமிக்ரான் பரவல் குறித்து மக்கள் இன்னும் 2 வாரங்களுக்குக் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.   

தமிழகம் கொரோனா பரவலைச் சமாளிக்கத் தயாராக உள்ளது.   தற்போது மருத்துவமனைகளில் உள்ள 1.91 லட்சம் படுக்கைகளில் 1.28 லட்சம் படுக்கைகள் கொரோனா சிகிச்சைக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.   தமிழகத்தில் டெல்டா வைகை கொரோனா தொற்று 10 – 15% பதிவாகிறது.   இதில் 7% பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.” எனத் தெரிவித்துள்ளார்.