தர்மபுரி

கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்து திறக்கப்படும் நீர் அதிகரிக்கப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது.   இதனால் கர்நாடகாவில் உள்ள அணைகளில் வேகமாக நீர் நிரம்பி வருகிறது.    இதையொட்டி கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள ஒகேனக்கல் பகுதிக்கு நேற்று மாலை விநாடிக்கு 16000 கன அடியாக நீர் வரத்து இருந்தது.  அது படிப்படியாக அதிகரித்து தற்போது விநாடிக்கு 18000 கன அடி நீர் வந்து கொண்டு உள்ளது.  ஒகேனக்கல் அருவிகளில் நீர் வரத்து அதிகரித்து வெள்ளம் கடுமையாக உள்ளது.

தற்போது மேட்டூர் அணையில் நீர் மட்டம் 71.87 அடியில் இருந்து 72.61 அடியாக உயர்ந்துள்ளது.   மேட்டூர் அணையின் நீர் வரத்து விநாடிக்கு 4,181 கன அடியில் இருந்து விநாடிக்கு 12,804 கன அடியாக  அதிகரித்துள்ளது.  காவிரி டெல்டா பாசனத்துக்கு அணையிலிருந்து விநாடிக்கும் 5000 கன அடி நீர் திரக்கபப்ட்டுள்ளது.