சென்னை

மிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று 12 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.    மாணவர்கள் தங்களின் வகுப்பு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் இறுதி மதிப்பெண்கள் அளிக்கப்பட்டுத் தேர்வு முடிவுகளை அரசு அறிவிப்பதாக தெரிவித்திருந்தது .

அவ்வகையில் இன்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று 12 ஆம் வகுப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளார்.    சென்னையில் உள்ள பள்ளிக் கல்வித்துறை அலுவலக வளாகத்தில் அமைச்சர் இதை வெளியிட்டுள்ளார்.

இந்த முடிவுகளை மாணவர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை இணையத்தில் உள்ளீடு செய்து தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.   இந்த முடிவுகள்  tnresults.nic.in; dge.tn.nic.in; dge1.tn.nic.in; dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் அறியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் இதே தளத்தில் இருந்து தங்கள் மதிப்பெண் சான்றிதழ்களை  ஜூலை 22 ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மொத்தம் 8,18,473 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.  பள்ளிக்கு வராத 1,858 மாணவர்கள் தேர்வு எழுதாதவர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.