சென்னை

மிழகத்தில் 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யலாம் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தொடர் வெப்பம் காரணமாகத் தமிழகத்தில் வெப்ப சலனம் ஏற்பட்டு வளி மண்டலத்தின் மேல் அடுக்கில் காற்று சுழற்சி உருவாகி வருகிறது.   இதனால் தமிழகத்தில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.  நேற்று அதிகபட்சமாகச் செய்யாறு சூளகிரியில் 100 மிமீ மழை பெய்துள்ளது.

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்போது தென் மேற்கு பருவக் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இதனால் தமிழகத்தில் கோவை, தேனி, நீலகிரி, சேலம், மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்.

திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, திருப்பூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும். இது தவிர, வட மேற்கு வங்கக் கடல் பகுதியில் 21ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவும் வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.