டில்லி

டந்து முடிந்த 16 மாதங்களில் இந்திய ஆட்டோமொபைல் நிறுவன பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

இந்திய ஆட்டோமொபைல் நிறுவன பங்குகள் மதிப்பு 2017 ஆம் ஆண்டு வரை வெகு வேகமாக வளர்ந்து வந்தன. டிசம்பர் 2017 வரை உயர்ந்து வந்த இந்த பங்குகள் மதிப்பு 2018 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தொடர்ந்து குறையத் தொடங்கின. இந்த பங்குகள் மதிப்பின் வீழ்ச்சி கடந்த 16 மாதங்களாக தொடர்கின்றன.

குறிப்பாக சந்தையில் தற்போது வாகனங்களுக்கான தேவைகள் மிகவும் குறைந்துள்ளன. இதனால் இந்த நிறுவனங்களில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். பயணிகள் வாகனத்தில் மாருதி சுசுகி மற்றும் மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவன பங்குகள் சுமார் 20% வரை வீழ்ச்சி அடைந்துள்ளன.

இதில் மாருதி சுசுகி நிறுவனம் சென்ற மாதம் மட்டும் 17% வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்த 16 மாதங்களில் இந்த பங்குகள் மதிப்பு வீழ்ச்சியால் 42 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ.2905 கோடிகள் ஆகும். இந்த 16 மாதங்களில் 2 மாதங்கள் மட்டுமே பங்கு மதிப்பில் அதுவும் மிகக் குறைந்த அளவில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.