டில்லி

ந்தியாவில் இரண்டாம் அலை கொரோனாவால் 798 மருத்துவர்கள் மரணம் அடைந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனாவால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இதுவரை இந்தியாவில் 3,03,62,162 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 3,98,487 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 2,94,20,028 பேர் குணம் அடைந்து தற்போது 5,31,732 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தற்போது இரண்டாம் அலை கொரோனா பாதிப்பில் அதிக அளவில் மரணம் ஏற்பட்டுள்ளது.   குறிப்பாக  இந்த அலையில் மருத்துவர்கள் மரண எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.   நேற்று இந்திய மருத்துவர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இதுவரை 798 மருத்துவர்கள் இரண்டாம் அலை கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.

இதில் அதிக அளவில் டில்லியில் 128 பேர் உயிர் இழந்துள்ளனர்.  அடுத்ததாக பீகார் மாநிலத்தில் 115 பேர் உயிர் இழந்துள்ளனர்.  மூன்றாவதாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் 79 பேர் உயிர் இழந்துள்ளனர்.    இதற்கு அடுத்ததாக கேரள மாநிலத்தில் 24 மருத்துவர்களும் மகாராஷ்டிராவில் 23 பேரும் உயிர் இழந்துள்ளனர்.

இதில் குறைந்த பட்சமாக புதுச்சேரியில் ஒரே ஒரு மருத்துவர் மட்டும் உயிர் இழந்துள்ளார்.