திருவனந்தபுரம்: கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை வீட்டிற்கு எடுத்துச்சென்று இறுதிச்சடங்கு செய்ய கேரள மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளார். இது அம்மாநில மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக உலக நாடுகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக சிக்கி அல்லல்பட்டு வருகிறது. இந்த பெருந்தொற்றால் பலியானர்களின் உடல்கள், மருத்துவமனையில் இருந்து பாதுகாப்புடன் எடுத்துச்சென்று அடக்கமோ அல்லது எரிக்கவோ செய்யப்பட்டு வருகிறது. இதனால் இறந்தவர்களின் உடலை உறவினர்கள் காண முடியாத நிலை நீடித்து வருகிறது.  கொரோனாவால் மரணமடைந்தவர்களின் உடல்களை வீட்டிற்கு கூட எடுத்து வர முடியாமல் எந்த வித இறுதிச்சடங்கும் செய்ய முடியாமல் தகனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. துக்கத்தில் கூட பங்குபெற முடியாமல் இறந்தவர்களுக்கு எந்த வித மரியாதையும் செலுத்த முடியவில்லையே என்ற மன அழுத்தம் பலருக்கும் ஏற்படுகிறது.

இருந்தாலும் செல்வாக்கு உள்ளவர்கள், பணம் படைத்தவர்கள், கொரோனாவில் இறந்தவர்களின் உடல்களை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து உடல்களைப் பெற்றுச்சென்று இறுதிச்சடங்கு செய்து வருகிறார்கள். இ

இந்த பிரச்சினைகளைத் தொடர்ந்து, கேரளாவில் புதிய உத்தரவினை பிறப்பித்துள்ளார் மாநில முதல்வர் பினராயி விஜயன், அதன்படி, கொரோனாவால்  உயிரிழந்தவர்களின் உடலை வீட்டிற்கு எடுத்து சென்று வீட்டில் 1 மணிநேரம் அஞ்சலி செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

கேரள அரசின் உத்தரவை அடுத்து இனி கொரோனாவின் உயிரிழந்தவர்களின் உடலை வீட்டிற்கு எடுத்து வந்து ஒரு மணி நேரம் இறுதிச் சடங்குகள் செலுத்திய பின்னர் தகனம் செய்யப்படுவார்கள்.

தமிழ்நாடு அரசும் கேரளாவை பின்பற்றி இதுபோல  உத்தரவிடுமான என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.