இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படும் வழக்கில் நீதிபதி விலகல்

Must read

புதுடெல்லி:
திமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படும் வழக்கில் இருந்து நீதிபதி விலகினார்.

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் விலகியதால் விசாரணை மார்ச் 25-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. லஞ்சம் தொடர்பாக டெல்லி காவல்துறை தொடுத்த வழக்கின் விசாரணைக்கு தடை கோரிய வழக்கில் இருந்து நீதிபதி விலகினார்.

இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் தர முயன்றதாக தொடரப்பட்ட வழக்கை விசாரிக்கும் நீதிபதி விலகியுள்ளார். நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் விலகியதை தொடர்ந்து வழக்கு விசாரணை மார்ச் 25-ஆம் தேதிக்கு ஓத்த்திவைக்கப்பட்டது.

இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் தர முயன்றதாக டி.டி.வி தினகரன் உள்ளிட்டோர் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துஉள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article