அ.தி.மு.க. – பா.ஜ.க. இடையே இன்னும் தொகுதி பங்கீடு முடிய வில்லை. ஆனாலும் தென் மாவட்டங்களில், அ.தி.,மு.க.வின் தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியினர் விளம்பரம் செய்து வைத்துள்ளனர்.

மதுரை தெற்கு தொகுதி, கடந்த தேர்தலில் அ.தி.மு.க. வென்ற தொகுதி. கடந்த தேர்தலில் பா.ஜ.க. சார்பாக போட்டியிட்டு தோற்றவர் – மகாலட்சுமி.

“இந்த முறை மகாலட்சுமி தான் வேட்பாளர்” என பா.ஜ,க.வினர் விளம்பரம் செய்துள்ளனர். இது, மதுரை மாவட்ட அ.தி.மு.க.வினர் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் அ.தி.மு.க. போட்டியிட திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் பா.ஜ.க.வின் தமிழக தேர்தல் துணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, ராஜபாளையம் பா.ஜ.க. ஊழியர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

“ராஜபாளையம் தொகுதியில் நடிகை கவுதமி தான், பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்” என அறிவித்தார்.

இதனால் அந்த மாவட்ட அ.தி.மு.க. தொண்டர்கள் கொந்தளிப்புடன் உள்ளனர்.

– பா. பாரதி