டில்லி
கொரோனா அதிகரித்த நாளில் இருந்து விற்பனை அதிகரித்த டோலோ 650 மாத்திரைகள் உணவுப் பொருள் அளவுக்கு விற்பனை ஆகி வருகிறது.
ஜுரத்துக்கு மருத்துவர்களால் அளிக்கப்படும் பாரசிடிமால் மருந்துகளில் டோலோ 650 மாத்திரைகளும் ஒன்றாகும். இந்த மாத்திரை குரோசின் போன்ற பிற மாத்திரைகளைப் போன்றவை என்றாலும் அனைத்து வயதினருக்கும் குறிப்பாக இதய நோய், சிறுநீரக நோய் மற்றும் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அதிக பாதிப்பை அளிப்பதில்லை.
கொரோனா நோயின் அறிகுறிகளில் முக்கியமானவை காய்ச்சல், இருமல், தொண்டைவலி போன்றவை ஆகும். இவற்றுக்கு பாரசிடிமால் மருந்துகளை உட்கொள்வது வழக்கமாகும். எனவே கொரோனா தொடங்கியதில் இருந்தே பாரசிடிமால் மாத்திரைகள் அதிக அளவில் விற்பனை ஆகின்றன. இந்தியாவில் டோலோ 650 உணவுப் பொருள் அளவுக்கு விற்பனை ஆகிறது.
கடந்த 2021 ஆம் வருடம் டிசம்பரில் மட்டும் டோலோ 650 ரூ.28.9 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது. கடந்த 2020 அம் ஆண்டு டிசம்பரை விட இது 61.45% அதிகமாகும். இதைப் போல் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் முறையே ரூ.48.9 கோடி மற்றும் ரூ.44.2 கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது. மற்ற பாரசிடிமால் மருந்துகளான கால்பால், குரோசினை விட இது அதிகமாகும்.