சென்னை: சுயமரியாதையை இழக்க வேண்டாம் என திமுகவின்  மூத்த அமைச்சர்களில் ஒருவரான கே.என்.நேருவுக்கு, தருமபுரி தொகுதி திமுக எம்.பி. டாக்டர் செந்தில்குமார் அறிவுரை கூறி உள்ளார்.

தமிழ்நாட்டின் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்து வருபவர் கே.என். நேரு. இவர் சமீபத்தில், குடும்ப விழா ஒன்றிக்கு அழைப்பு விடுக்கும் வகையில், மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரை சந்தித்து ஆசி பெற்றார். அப்போது, அவர், பங்காரு அடிகளார் முன்பு தரையில் அமர்ந்து இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது.

பொதுவாகவே திமுகவினர் சமத்துவம் மற்றும் சுயமரியாதை, கடவுளுக்கு எதிரான கொள்கைகளை பேசி வருகின்றனர். ஆனால், அவர்களின் குடும்பத்தினரோ கோவில் கோவிலாக சென்று வணங்கி வருகின்றனர். இதில் முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலினும் விலவிலக்கு அல்ல. இந்த நிலையில், அமைச்சர் கே.என். நேரு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மாவை நேரில் சந்தித்த புகைப்படம் வெளியானது.  இதில்  நேரு, தன் அருகில் சோபா இருந்தும் சாமியாரின் முன் தரையில் அமர்ந்து இருந்தார்.

இது குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கடவுள் மறுப்பு கொள்கை என்று கூறிக்கொண்டு, கடவுளிடம் மண்டியிடு கின்றன திமுகவினர் என பாஜகவினரும்,   அமைச்சரின் நடவடிக்கை குறித்து திமுகவினரும் விமர்சித்து வருகின்றனர். இதற்கிடையில், அமைச்சர் நேரு, பங்காரு அடிகளார் முன்பு சோபாவில் அமர்ந்துள்ளது போன்ற புகைப்படமும் வெளியானது. ஆனால், அது போலியானது என்பது தெரிய வந்தது.

இந்த நிலையில், அமைச்சரின் நேருவின் நடவடிக்கை குறித்து, தருமபுரிதொகதி  திமுக நாடாளுமன்ற எம்.பி செந்தில்குமார் தனது டிவிட்டர் கடுமையாக சாடியுள்ளார். அவரது டிவிட்டில்,

 “கடவுளை வணங்குவதும்/மறுப்பதும் தனி மனித உரிமை.

So called (ஆ)சாமியார்கள் சந்திப்பதும் தனி மனித விருப்பம். 

ஆனால் எக்காரணத்தை கொண்டும் சுயமரியாதை இழக்க வேண்டாம்,

பெரியார், அண்ணா கலைஞர் அவர்களுக்கு நாம் செலுத்தும் குறைந்த பட்ச மரியாதை நம் சுயமரியாதையை காப்பதே” என்று பதிவிட்டுள்ளார். 

திமுக எம்.பி.யின் டிவிட்டும் தற்போது இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மூத்த அமைச்சரின் நடவடிக்கு குறித்து திமுக எம்.பி. நேரடியாக விமர்சித்துள்ள தற்கு கட்சியினரே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் மனைவி இதுபோல ஏராளமான  கோவில்களுக்கு சென்று, அங்குள்ள பூசாரிகளிடமும் ஆன்மிகவாதிகளிடமும் ஆசி பெறுகிறாரே அது குறித்து. துர்பாக ஸ்டாலினிடம் சுயமரியாதையா இழக்க வேண்டாம்  விமர்சிப்பாரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.