புதிய கல்விக் கொள்கையை திமுக தொடர்ந்து எதிர்க்கும் – கனிமொழி

Must read

சென்னை:
புதிய கல்விக் கொள்கையை திமுக தொடர்ந்து எதிர்க்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்று வந்த மார்பக பரிசோதனை முகாம் நிறைவு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  “பெண்களிடம் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு குறைவாக இருப்பதாகத் தெரிவித்த அவர் தயக்கமின்றி பெண்கள் மார்பக புற்றுநோயைத் தடுக்கும் வகையில் பரிசோதனை மேற்கொள்வது அவசியம் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர்,  புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கட்சியாக இருக்கும் போது எந்த அளவு திமுக எதிர்த்ததோ அதே அளவு இனிவரும் காலங்களிலும் திமுக எதிர்க்கும் என்று கூறினார்.
நவம்பர் 1ம் தேதிக்குப் பதில் தமிழ்நாடு நாள் ஜூலை 18-ஆம் தேதி கொண்டாடப்படும் எனத் தமிழக முதல்வர் அறிவித்துள்ளதற்கு மாறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுவது குறித்த கேள்விக்குப் பதிலளித்த கனிமொழி,  பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18-ஆம் தேதி தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படுவது சரியாக இருக்கும் என்று தெரிவித்தார்.

More articles

Latest article