சென்னை: கடந்த மாதம் (பிப்ரவரி) நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்  திமுக கூட்டணி கட்சிகளுக்கு எதிராக செயல்பட்ட திமுக நிர்வாகிகள் கட்சியிலிருந்து  சஸ்பெண்ட் செய்து திமுக தலைமை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அதையடுத்து தலைமைப் பதவிகளுக்கான மறைமுக தேர்தலில், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களிலும் திமுகவினரே போட்டியிட்டு பதவிகளை கைப்பற்றினர். இது கூட்டணி கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து கட்சி தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்ட திமுகவினர் தங்களது பொறுப்புகளை gலர் ராஜினாமா செய்தனர். ஆனால் திமுக நிர்வாகிகள் சிலர் பதவி விலகாமல் இருந்தனர்.

இந்த நிலையில்,  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுககூட்டணிகட்சிகளுக்கு எதிராக செயல்பட்ட திமுக நிர்வாகிகள்கட்சியிலிருந்து அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.ககூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் பதவியேற்றுள்ள நிர்வாகிகள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதாக திமுக தலைமைகழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

திருப்பூர், தேனி, நீலகிரி மாவட்டத்தில் உள்ள திமுக நிர்வாகிகள் 5 பேர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு எதிராக செயல்பட்டதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.