சென்னை:  வரும் 23ந்தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில்  திமுக மாவட்டச் செயலாளர்கள் தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக்கூட்டம் காணொளி காட்சி வாயிலாக நடைபெறும் என திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

 தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் வரும் 23ந்தேதி காலை 11 மணி அளவில் காணொளி காட்சி வாயலிக நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்து உள்ளார்.

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

இந்த நிலையில் திமுக மாவட்டச் செயலாளர் ஆலோசனைக் கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற உள்ளது. பிப்ரவரி 23ஆம் தேதி காலை 11:30 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை கூட்டம் நடைபெறும் என கட்சியின் பொருளாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுக மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள் என அனைவரும் இதில் கலந்துகொள்ள வேண்டும் என திமுக தலைமை கழகம் அறிவுறுத்தியுள்ளது.