சென்னை: திமுக கூட்டணி கட்சிகள் இன்று மாலை மனித சங்கிலி போராட்டம் நடத்துகின்றன. இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளும்படி  திமுகவுக்கும் கூட்டணி கட்சி தலைவரான  திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில்,  இன்று   இன்று மாலை 4 மணி அளவில் திமுக கூட்டணி கட்சிகளான விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்பட பல கட்சிகள் இணைந்து சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடத்துகின்றன. சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான வெறுப்பு அரசியலுக்கு இடமில்லை என்றும்,  சமூக நீதிக்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் மட்டுமே இந்த மண்ணில் எப்போதும் இடமுண்டு என்பதை உணர்த்தக் கூடிய வகையில் தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று சமூக நல்லிணக்க மனித சங்கிலி அறப்போர் நடைபெறுகிறது.

இந்த அறப்போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள், இயக்கங்கள் கலந்து கொள்கின்றன. ஆனால், ஆளுங்கட்சி என்ற முறையில் திமுக இதில் பங்கேற்கவில்லை. இதையடுத்து,   திமுகவைச் சார்ந்த தொண்டர்கள் இதில் பங்கேற்க வேண்டும் என்று  விசிக தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளர். திமுக கூட்டணியில் இடம் பெறாத தமிழ் தேசிய உணர்வாளர்கள், ஜனநாயக பற்றாளர்கள் என பலரும் இந்த அறப்போரில் பங்கேற்க இருக்கிறார்கள் என திருமா தெரிவித்து உள்ளார்.

சென்னையில் பெரியார் சிலையில் இருந்து அண்ணா மேம்பாலம் வரை மனித சங்கிலி நடைபெறும். முக்கிய தலைவர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள்.

சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்த்து விடும் சங்பரிவார் வலதுசாரி அமைப்புகளுக்கு தமிழகத்தில் இடமில்லை என்பது உணர்த்துவதற்காகதான் இந்த அறப்போர் நடைபெறுகிறது. வலதுசாரிகளுக்கு இது கடைசி எச்சரிக்கையாக இருக்கும் என்று நான் நம்புகிறேன் என திருமா கூறியுள்ளார்.