சிறை தண்டனை அனுபவித்த மொஹ்சின் ரெசா என்பவருக்கு கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் தனது அலுவலகத்தில் வேலைவழங்கி அவருக்கு மறுவாழ்வு வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக தி இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையைச் சேர்ந்த செய்தியாளர் சுநேத்ரா சௌத்ரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கைது செய்யப்பட்ட டி.கே. சிவக்குமார் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்ட போது சிறையில் அவருடன் இருந்த இரண்டு நபர்களுக்கு வேலை வழங்கி அவர்களுக்கு மறுவாழ்வு அளித்துள்ளார்.

மொஹ்சின் ரெசா ஜாமீனுக்கு தேவையான பணத்தை வழங்கிய டி.கே. சிவக்குமார், டெல்லியில் உள்ள தனது அலுவலகத்தில் அவருக்கு வேலையும் வழங்கியுள்ளார்.

தவிர, டி.கே. சிவக்குமார் மற்றொரு நபருக்கும் உதவி செய்துள்ளதாகவும் அவர் தற்போது பெங்களூரில் சில மாணவர்களுக்கு இந்தி கற்றுத் தருவதாகவும் அதில் பதிவிட்டுள்ளார்.