டில்லி

மெரிக்காவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 10 நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி கர்நாடக சட்டசபைத் தேர்தலில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.  கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது அவருக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது.

அவர் வரும் 31-ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார். அமெரிக்காவில் அவர் 10 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின்போது அடுத்த மாதம் 4-ந் தேதி நியூயார்க் மேடிசன் சதுக்கம் கார்டனில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் அவர் பேசுகிறார்.

கூட்டத்தில் ஏறத்தாழ 5 ஆயிரம் அமெரிக்க வாழ் இந்தியர்கள் கலந்து கொள்ள உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் வாஷிங்டன் மற்றும் கலிபோர்னியாவுக்கும் செல்ல உள்ளார். ராகுல் கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் அவர் கலந்துரையாட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.