ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தர்பார்.

பொங்கலை முன்னிட்டு கடந்த 9ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் ரிலீஸானது. உலகம் முழுவதும் 7 ஆயிரம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆன இந்த திரைப்படத்தை ரசிகர்கள் தர்பார் திருவிழாவாக கொண்டாடினர்.

படம் வெளியாகி 4 நாட்களில் 150 கோடி வசூல் செய்துள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது .

ஆனால் படம் நஷ்டமடைந்ததாக கூறி நடிகர் ரஜினியை நேரில் சந்திக்க விநியோகஸ்தர்கள் வருகை தந்துள்ளனர். ரூ.65 கோடி கொடுத்து தர்பார் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

தங்களுக்கான இழப்பீட்டு தொகையை ரஜினிகாந்த பெற்றுத் தர வேண்டுமென விநியோகஸ்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இன்று (பிப்ரவரி 3) காலை ரஜினியின் வீடு இருக்கும் போயஸ் கார்டனுக்கு விநியோகஸ்தர்கள் சென்றனர்.

இதனால் ஆழ்வார்பேட்டையில் இருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் அலுவலகத்துக்கு தற்போது விநியோகஸ்தர்கள் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவத்தால் ‘தர்பார்’ நஷ்ட ஈடு விவகாரம் மீண்டும் வெடித்துள்ளது.