விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ, லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

6 மாதங்களில் மொத்தம் 125 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றதாக பதிவிட்டுள்ள லோகேஷ் கனகராஜ் படத்தின் டப்பிங், ரீ-ரெக்கார்டிங் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்சன் வேலைகளை விரைவில் தொடங்க உள்ளார்.

த்ரிஷா, சஞ்சய் தத், கவுதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, காஷ்மீர், ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது.

அனிருத் இசையில் இந்த படத்தில் இடம்பெற்ற, ‘நா ரெடி’ பாடல் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் அக்டோபர் 19ம் தேதி ரிலீசாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.