டாஸ்மாக் கடையில் மதுவாங்கிய பெண்களின் வீடியோவை தனது ட்விட்டரில் பதிவிட்ட நடிகை கஸ்தூரி பெண்களை இழிவுபடுத்தும் விதமாக பதிவிட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள கஸ்தூரி “மகளிர் உரிமைத் தொகை சிந்தாம சிதறாம திரும்பிடும்” என்று தமிழகத்தின் ஒட்டுமொத்த மகளிரும் டாஸ்மாக்கை நோக்கி படையெடுப்பவர்கள் போல் சித்தரித்துள்ளார் என்று அவருக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.

இதற்கு பதிலளித்துள்ள மூடர் கூடம் படத்தின் இயக்குனரும் நடிகருமான நவீன் “பெண்னாக இருந்துகொண்டு திராவிடியா என்று சொல்வதை நிறுத்துங்கள். மது மனிதனின் உடல்நலத்திற்கு கேடு. ஆதிக்க உணர்வு சமூகத்திற்கே கேடு” என்று பதிவிட்டுள்ளார்.

“பணக்கார மேல்தட்டு பெண்கள் மது அருந்துவதை நீங்கள் பார்த்ததே இல்லையா?” என்று கேள்வி எழுப்பியுள்ள அவர் சாமானிய பெண்கள் அனைவரும் மது அருந்துவதாக கூறி இழிவு படுத்தி இருப்பதை ஆதிக்க உணர்வு என்று கண்டித்துள்ளார்.