திண்டுக்கல்

க்காளி விலை கிலோ ரூ.2 ஆக சரிந்துள்ளதால் திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் கடும் துயரம் அடைந்து சாலையில் கொட்டி விட்டுச் சென்றுள்ளனர்.

தற்போது திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் ஒட்டன் சத்திரம் காந்தி அங்காடியில் தக்காளி வரத்து மிகவும் அதிகரித்துள்ளது.    ஆயினும் தக்காளியை வாங்க வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வம் காட்டாததால் விலை கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

இன்று இங்கு ஒரு கிலோ தக்காளியில் விலை ரூ.2 ஆகச் சரிந்தது.  விவசாயிகள் இதனால் கடும் இழப்பை சந்தித்துள்ளனர்.  விளைச்சல் அதிகமாவதால் தங்களுக்கு இழப்பும் அதிகமாவதாக வருத்தம் விவசாயிகள் வருத்தம் தெரிவித்தனர்.  மேலும் விலை குறைவு காரணமாக தாங்கள் கொண்டு வந்த தக்காளியைச் சாலையில் கொட்டி விட்டுச் சென்றுள்ளனர்..

இது குறித்து விவசாயி ஒருவர், “தக்காளி விளைச்சல் அமோகமாக இருப்பதால் நல்ல வருமானம் கிடைக்கும் என எதிர்பார்த்தோம்.  ஆனால் விலை குறைந்துள்ளதால் பயிரிட்ட எங்களுக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது.  அரசே தக்காளி கொள்முதல் செய்து உதவ வேண்டும்” எனக் கூறி உள்ளார்.