மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனம் தொடர்பாக ஆபாச வீடியோ  இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்ட விகாரம் தொடர்பாக, அதிமுக பிரமுகர் வீட்டில்  இன்று அதிகாலை முதல் காவல்துறையினர் சோதனையிட்டு வருவதாக கூறப்படுகிறது.

மயிலாடுதுறையில் உள்ள பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தின் 27வது குரு மகா சன்னிதானமாக உள்ளவர், ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள். இவர் தொடர்புடைய ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகள் உள்ளதாக நிர்வாகத்தினரைத் தொடர்பு கொண்டு சிலர் மிரட்டி பணம் கேட்டதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக தருமபுரம் ஆதீனத்தின் சகோதரர் விருத்தகிரி அளித்த புகாரின் பேரில், பாஜக மாவட்ட தலைவர், திமுகவைச் சேர்ந்தபிரமுகர், வழக்கறிஞர் செம்பனார்கோவில் கலைமகள் கல்வி நிறுவனத் தாளாளர் குடியரசு . என 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அதில் 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  மற்றவர்களை தேடி வருவதாக கூறப்பட்டது.

பின்னர், திமுக பிரமுகர் பெயர்  காவல்துறை பதிந்துள்ள முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்ற நிலையில்.  ஆதினம் சார்பில், திமுக பிரமுகர் தங்களுக்கு உதவிதான் செய்தார் என பல்டி அடித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.  தொடர்ந்து, ஆதினம் சார்பில் தமிழக அரசுக்கும், முதலமைச்சருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில்,  தருமபுரம் ஆதீனத்தை பணம் கேட்டு மிரட்டி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் அதிமுக பிரமுகர் ஜெயச்சந்திரன் வீடு மற்றும் அவரது உறவினர் வீடுகளில் போலீஸார் சோதனையில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தருமபுரம் ஆதீனத்திற்கு மிரட்டல்: பாஜக நபர், ரவுடி கைது – பாஜக மாவட்ட செயலாளர், திமுக பிரமுகர் தலைமறைவு….