இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட உள்ளது.

கனெக்ட் மீடியா தயாரிக்கும் இந்தப் படத்தில் இளையராஜாவாக நடிக்க நடிகர் தனுஷ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட உள்ளதாக யுவன் ஷங்கர் ராஜா ஏற்கனவே கூறிய நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

2024ம் ஆண்டு படப்பிடிப்பு துவங்க உள்ள நிலையில் 2025ம் ஆண்டு இந்தப் படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 50 ஆண்டுகளில் 1000க்கும் மேற்பட்ட படங்கள் 7000க்கும் அதிகமான பாடல்களுக்கு இசையமைத்துள்ள இசைஞானி இளையராஜா இதுவரை 20000க்கும் மேற்பட்ட கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார்.