செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், இந்துஜா, எல்லி அவுர் ரம் நடிக்கும் படம் ‘நானே வருவேன்’.

தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வரும் இந்தப் படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வருகிறது.

யுவன் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

ஒரே நேரத்தில் ‘வாத்தி’ மற்றும் ‘நானே வருவேன்’ ஆகிய இரண்டு படங்களில் கேப்பே இல்லாமல் நடித்து வரும் தனுஷ் மூன்றாவதாக திருச்சிற்றம்பலம் படத்திற்காக டப்பிங்கும் பேசி வருகிறார்.

இந்த நிலையில், யோகி பாபு, பிரபு, இந்துஜா ஆகியோருடன் தனுஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.

துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களின் மூலம் இளசுகளின் மனதை கொள்ளையடித்த தனுஷ் – செல்வராகவன் கூட்டணி 11 ஆண்டுகளுக்குப் பிறகு ‘நானே வருவேன்’ படத்திற்காக மீண்டும் இணைந்திருக்கிறது.

இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள செல்வராகவன், “நீண்ட காலமாக நாங்கள் இருவரும் எங்களுடைய சொந்தத் திட்டங்களில் பிஸியாக இருந்ததால், ஒருவரோடொருவர் தரமான நேரத்தைச் செலவிடும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைக்கவில்லை. நானேவருவேனில் இந்த பொன்னான வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. இந்த நாயகன் தனுஷ் தங்க இதயம் கொண்ட சிங்கம்” என்று பதிவிட்டுள்ளார்.