அறிவோம் தாவரங்களை –  ஓமம் செடி

ஓமம் செடி.(Trachyspermum ammi).

எகிப்து உன் தாயகம்!

பாரதத்தில் அதிகம் பயிரிடப்படும் பசுமை  செடி நீ!

காரத்தன்மை கொண்ட கவின்மிகு செடி நீ !

ஒரு மீ. வரை உயரம் வளரும் உன்னத செடி நீ!

ஓமம், குரோசாணி ஓமம், அசம்தா ஓமம் என மூவகையில் விளங்கும் முத்து செடி நீ!

மூக்கடைப்பு,  அஜீரணம், வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, உடல் வலிமை, பல்நோய்கள், ஆஸ்துமா, ஆசனவாய் நோய்கள், தொண்டைப் புகைச்சல், மந்தம், சுவாச காசம்,தொப்பை குறைப்பு, இடுப்பு வலி, கர்ப்பிணி பெண்களின் வாயுப் பிடிப்பு, மாதவிடாய் பிரச்சனை, அடி வயிறு வலி, தசைப்பிடிப்பு, சளி, மூக்கடைப்பு,  தாய்ப்பால் சுரப்பு ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!’

சீதசுரம் காய்ச்சல் செறியா மந்தம்….. சொல்லொடுபோம்; ஓமம் எனச் சொல்’ என அகத்தியர் போற்றிப் புகழும் அற்புத செடியே!

மதுபான மணமேற்றல், கேக் செய்யப் பயன்படும் மேன்மை செடியே!

கால்சியம், பாஸ்பரஸ் சத்து கொண்ட தோட்டச்செடியே!

சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படும் அழகு செடியே!

மணமுள்ள காய்கள் தரும் வனச்செடியே!

கொத்துக் கொத்தாகப்  பூப் பூக்கும் கொழுந்து செடியே!

ஓராண்டு மூலிகைத் தாவரமே!

குழந்தைகளின் ஓமத்திரவமே!

நீவிர் பல்லாண்டு வாழ்க! வளர்க!உயர்க!

நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்

நெய்வேலி.

📱9443405050.