அறிவோம் தாவரங்களை – வெற்றிலை

வெற்றிலை. (Piper betle)

2500 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய பணப்பயிர்!

மலேசியா உன் தாய் நாடு!

ஈழநாட்டு ‘மகாவம்சம்’ என்ற வரலாற்று நூலில் இடம் பெற்ற தண்டுத் தாவரம்!

வயிற்றுப் பிரச்சனைக்கு வாய்த்த நல் மருந்து!

கோழைச்சளியை ஓரங்கட்டும்!

பசியைக் கொடுக்கும்!

வாத நோய்ப்போக்கும்!

ஆனைக்கால் நோய் அகன்று போகும்!

நினைவாற்றலை அளிக்கும் மூலிகைத் தாவரம்!

காதுகளைக் காக்கும் பாதுகாவலன்!

ஈரல், இதயத்தின் இயற்கை நிவாரணி!

வாக்கு சிறக்கவும், வாய்  மணக்கவும் பாக்கு சுண்ணாம்புடன் இணைந்த கூட்டுக் கலவை!

திருமண விழாவில் சாட்சித் தாம்பூலம்!

பெட்டிக் கடைகளின் பெரிய முதலீடு தாம்பூலம்!

நாகவல்லிவேந்தன், திரையல் என நால்வகை பெயரில் நடமாடும் பச்சிலை!

கணவனை மகிழ்விக்கும் வசிய லேகியம்!

தெய்வ வழிபாட்டில் அர்ச்சனை பொருள் நீ!

ஆஞ்சநேயர் விரும்பும் அழகு மாலை!

ராஜசூய யாகத்தில் தர்மர் கிருஷ்ணனுக்குத் தந்த பரிசுப்பொருள்!

காளமேகம் நாவில் மேவிய அம்மன் திருவாய் அமிர்த நீர்!

ஒட்டக்கூத்தரின் உதட்டில் இருந்த  கல்விக் கலைமகள் திருவாய் தீர்த்தம்!

இலங்கைச் சீதை அனுமனுக்குத் தந்த அர்ச்சனைப்பரிசு!

மகிமை மிக்க பொருளே!

மங்கலமான திருவே!

நீவிர் மணக்க இனிக்க வாழ்க!வளர்க!

நன்றி : பேரா.முனைவர் ச.தியாகராஜன்(VST).

நெய்வேலி.

☎️9443405050