அறிவோம் தாவரங்களை – சர்வ சுகந்தி மரம்

சர்வ சுகந்தி மரம் (Pimenta dioica)

மேற்கிந்தியத் தீவுகள், (ஜமைக்கா) உன் தாயகம்!

உணவில் நறுமணம் கூட்டும் உன்னத இலை மரம் நீ!

59 அடி வரை வளரும் அழகு மரம் நீ!

குளிர் பிரதேசங்கள் உன் கூடாரம்! சோம்பு, ஏலக்காய்,கிராம்பு, பட்டை இவற்றின் நறுமணங்களை நீ தருவதால் ‘ஆல் ஸ்பைஸ்’ மரமானாய்!.

அமெரிக்க,ஐரோப்பிய நாடுகள் எனப் பல்வகை நாடுகளில் சமையலில் பயன்படும் இலை மரம் நீ!

ஆல் மசாலா, பல மசாலா, ஜமைக்காய் பெப்பர்  எனப் பல்வகைப்பெயர்களில் விளங்கும் நல்வகை மரம் நீ!

ஜீரணசக்தி, வயிற்றுவலி, பல்வலி, மலச்சிக்கல்,தோல் வியாதி, வாய் துர்நாற்றம், வாயுத் தொல்லை, முடி வளர்ச்சி, உடல் ஆரோக்கியம்,எலும்பு முறிவு, ரத்த சர்க்கரை அளவு குறைப்பு, நீரிழிவு, இதய நலம்,வளர்சிதை மாற்றம் ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!

பிரியாணி சாப்பாட்டுக்குப் பெருமை சேர்க்கும் நறுமண நல்மரமே!

தென்னந்தோப்புகளில் வளர்க்கப்படும் ஊடுபயிரே!

ஐந்து ஆண்டுகளில் பலன் கொடுக்கும் வேளாண் மரமே!

விதைகள் & பதியன் முறை மூலம் இனப்பெருக்கம் செய்யும் இனிய மரமே!

மிளகு வடிவ கனி கொடுக்கும் இலை மரமே!

பச்சைநிற காய் கொடுக்கும் பசுமை மரமே!

வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படும் நாட்டு மரமே!

நறுமணம் மிகுந்த கற்பகமே!

இரும்புச்சத்து,பொட்டாசியம்,தாமிர சத்து மிகுந்த மருந்து மரமே!

நீவிர் பல்லாண்டு வாழ்க!வளர்க!உயர்க!

நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்

நெய்வேலி.

☎️9443405050