அறிவோம் தாவரங்களை – குவளைக் கொடி

குவளைக் கொடி (Nymphea odorata)

குளங்கள், மலைகளில் பூத்துக்குலுங்கும் நீர்த்தாவரம் நீ!

உன் இன்னொரு பெயர் செங்கழுநீர்க்கொடி!

சங்ககால மகளிர் குவித்து விளையாடிய குவளை மலர் கொடி நீ!

செங்குவளை, கருங்குவளை, வெண் குவளை, நீலக்குவளை எனப் பல்வகையில் விளங்கும் நல்வகைக் கொடி நீ!

பெண்களின் கண்கள் போன்று விளங்கும் கவின்மிகு மலர் கொடி நீ!

வடக்கு ஆஸ்திரேலியாவில் பழங்குடியினர் உணவாகப் பயன்படும் உன்னத மலர் கொடி நீ!

கிழங்கு, தண்டு, மலர்கள், விதைகள் என எல்லாம் பயன்படும் நல்ல குவளைக்கொடி நீ!

தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருவாய்மொழி நூல்கள் போற்றும்  தெய்வ மலர்க்கொடி நீ!

மாலையில் குவிந்து காலையில் மலரும் பூங்கொடி நீ!

ஆடவர் மனதைக் கவர பரத்தையர் அதிகமாய்ச் சூடிய மணமலர்க்கொடி நீ!

கதவுகளின் கைப்பிடிகள் உன் வடிவம் கொடுத்து அழகு சேர்த்த அற்புதப் பூங்கொடி நீ!’

காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்;மாணிழை யார் கண்ஒவ்வோம் என்று’ என வள்ளுவர் (1114) போற்றும் வண்ண மலர் கொடியே!

கபிலர் போற்றும் கவின்மிகு மலர்க்கொடியே!

தொட்டிகளில் வளர்க்கப்படும் தாழிப் பூங்கொடியே!

நீவிர் பல்லாண்டு வாழ்க! வளர்க! உயர்க!

நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்(VST)

நெய்வேலி.

📱9443405050.