அறிவோம் தாவரங்களை – சடா மாஞ்சில்

சடா மாஞ்சில் (Nardostachys jatamansi).

இமயமலை அடிவாரம் உன் தாயகம்!

பூங்கோரை இனத்தைச் சேர்ந்த புனித செடி நீ !

சடமாசி, சடாமாஞ்சி, பைகாசி தகரம் எனப் பல்வகைப் பெயர்களில் விளங்கும் நல்வகை செடி நீ!

காரச்சுவையும் வெப்பத் தன்மையும் கொண்ட கோரைப்புல் நீ!

60 சென்டிமீட்டர் வரை உயரம் வளரும் அழகு செடி நீ!

இலங்கை பர்மா,பூட்டான் நாடுகளில் அதிகமாகக் காணப்படும் அழகு செடி நீ !

காக்கா வலிப்பு, குஷ்டம், பேதி, கூந்தல் கருமை, மூச்சு இரைப்பு, சிறுநீர்ப் பெருக்கம், கோழைச் சளி, இருமல், சிலந்தி, நஞ்சு, காய்ச்சல், உட்சூடு, வாய்வு, வாத வலி, கழிச்சல், கண் நோய்கள், உறக்கம், அஜீரணம், இருமல் ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!

நீண்ட ஆணிவேர் கொண்ட மருத்துவச் செடியே!

கொத்துக் கொத்தாகப் பூப் பூக்கும் கோரைச்செடியே!

கஷாயம் தயார் செய்யக் கிழங்கு கொடுக்கும் மலைசெடியே!

நீவிர் பல்லாண்டு வாழ்க!வளர்க!உயர்க!

நன்றி : பேரா.முனைவர்.

ச.தியாகராஜன் நெய்வேலி.

📞9443405050