அறிவோம் தாவரங்களை – திருவோடு மரம்

திருவோடு மரம்  (Crescentia cujete)

 

மெக்சிகோ சீசெல்ஸ் தீவு உன் தாயகம்!

துறவிகளுக்குத் திருவோடு பாத்திரம் தரும் கொடை மரம் நீ!

மடங்களில் வளர்க்கப்படும் மகத்துவ மரம் நீ!

60 அடிவரை உயரம் வளரும் அழகு மரம் நீ! 21 அடி வரை நீண்ட இலைகளையுடைய பிரம்மாண்ட மரம் நீ!

21 அடி வரைநீளம் கொண்ட பெரிய பூ மரம் நீ!

மாலத்தீவுகளில் அதிகமாய்க் காணப்படும் மாண்பமை மரம் நீ!

கடல் தேங்காய் ஓடு, திருவோட்டுக்காய், இரட்டைத் தேங்காய், கடல் பனை எனப் பல்வகைப் பெயர்களில் விளங்கும் பசுமை மரம் நீ!

மூச்சு இரைப்பு, சுவாசக்கோளாறு, மலச்சிக்கல், குடல் புழு, வயிற்று எரிச்சல், ஆகியவற்றுக்கு ஏற்ற தெய்வீக மூலிகை மரம் நீ!

அமெரிக்காவில் உணவுப் பொருள் தயாரிக்க விதை தரும் கனிமரம் நீ!

பாத்திரங்களின் மூடிகள், சேமிப்புக் கலன்கள், அழகுப் பெட்டிகள், இசைக்கருவிகள் செய்யப் பயன்படும் நயன்மிகு மரம் நீ!

யானைகளால் மட்டும் உடைக்கப்படும் வலிமைமிகு பழ மரமே!

வௌவால்களுக்குத் தேன் கொடுக்கும் இனிய பூமரமே!

விசிறி வடிவ பெரிய இலைகளை உடைய வினோத மரமே!

23 கி.கி.வரை எடை அளவு கொண்ட விதை மரமே!

கடல் நீரோட்டத்தின் மூலம் இனப்பெருக்கம் செய்யும் இனிய மரமே!

உலகின் மிகப்பெரிய விதை மரமே!

நீவிர் பல்லாண்டு வாழ்க! வளர்க! உயர்க!

நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்(VST)

முதல்வர்

ஏரிஸ் கலைக் கல்லூரி,

வடலூர்.📱9443405050.