பாலியல் வன்புனர்வு வழக்குகளை பைசல் செய்வதில் டெல்லி போலீஸ் முதலிடம்: உள்துறை அமைச்சகம் தகவல்

Must read

புதுடெல்லி:

58.3% பாலியல் வன்புனர்வு வழக்குகளில் டெல்லி போலீஸார் 2 மாதங்களில் விசாரணையை முடித்துள்ளனர்.


மத்திய உள்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவித்துள்ள தகவலில், பாலியல் வன்புனர்வு குற்றங்களில் இருந்து குழந்தைகளை காக்கும் போக்ஸோ சட்டத்தின் கீழ், பாலியல் வன்புனர்வு வழக்குகளை விரைந்து முடித்து முதல் இடத்தில் டெல்லி போலீஸ் உள்ளது.

2018-ம் ஆண்டு கிரிமினல் சட்ட திருத்தத்தின்படி, இது போன்ற வழக்குகளில் 2 மாதங்களுக்குள் விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும்.

அந்த வகையில் 58.3% சதவீத பாலியல் வன்புனர்வு வழக்குகளை விசாரித்து, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர் டெல்லி போலீஸார்.

55.9% வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து ஹரியானா போலீஸார் இரண்டாம் இடத்தில் உள்ளனர்.

50.8% வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து மத்திய பிரதேச போலீஸார் 3வது இடத்தில் உள்ளனர்.

பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையில், ஜார்கண்ட், நாகாலாந்து மற்றும் சிக்கிம் மாநிலங்கள் மோசமான நிலையில் உள்ளன.

புதுடெல்லியில் ஆண்டுதோறும் 2 ஆயிரம் பாலியல் வன்புனர்வு வழக்குகள் பதிவாவது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article