புதுடெல்லி:

ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்வதை 2 மாதங்களுக்கு நீட்டிக்க ஜிஎஸ்டி கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.


மறைமுக ஜிஎஸ்டி வரியை அனைத்து துறைகளுக்கும் விரிவுபடுத்த வேண்டிய நேரம் இதுதான்.  பெட்ரோலியப் பொருட்கள், மின் துறை,மற்றும் மதுபானங்கள் தயாரிக்க பயன்படும் ஆல்கஹால் ஆகியவற்றையும் ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வரவேண்டும்.

ஜிஎஸ்டியை மேம்படுத்த வேண்டியது குறித்து முடிவு எடுக்க வேண்டிய நிலையில் ஜிஎஸ்டி கவுன்சில் இருப்பதாக இந்திய வர்த்தக கவுன்சில் இயக்குனர் ஜெனரல் சந்திரஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, ஜிஎஸ்டி கவுன்சிலின் ஊதியம் பெறாத இரு அதிகாரிகளின் பதவி காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது.

நுகர்வோருக்கான ஜிஎஸ்டி வரி குறைப்பை செயல்படுத்தாவிட்டால் 10% அபராதம் விதிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.  மேலும்,ஜிஎஸ்டி-நெட்வொர்க்குடன் தொழிலை பதிவு செய்ய ஆதாரை அனுமதிப்பது எனவும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்யும் தேதி  2 மாதங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டது.