தீபா மீசை: கண்டனமும், தீர்வும்!

நெட்டிசன்:

சித்த மருத்துவர் கா.திருத்தணிகாசலம் (Ka Thiruthanikasalam) அவர்களின் முகநூல் பதிவில் இருந்து..

மூகவலைதளங்களில் பலர், “எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை”யின்  பொருளாளர்,  தலைவர் ,பொதுச்செயலாளரான  தீபாவின்  குலோசப் புகைப்படத்தை பதிந்து  கிண்டலடிக்கிறார்கள்.

இதை வண்மையாக கண்டிக்கிறேன்

ஒருவரின் உருவத்தை வைத்து விமர்சனம் செய்வது சரியானதல்ல.

சில பெண்களுக்கு, ஆண்களைப்போல (அரும்பு) மீசை வளர்வது உண்டுதான். இது கீழ்கண்ட காரணங்களால் இது நிகழலாம்

 ஹார்மோன் குறைபாடு

 தைராய்டு சுரப்பிகள் குறைபாடு

கர்ப்பபை நீர் கட்டிகள்

 மாதவிடாய் கோளாறு

கர்ப்பபை கட்டிகள்

 அதீத உடல்எடை

 டெஸ்டோஸ்டீரான் அளவு இரத்தத்தில் அதிகரிப்பது

இளம்வயதில் பிராய்லர் கோழி முட்டை அதிகமாக சாப்பிடுவது

இதை தக்கசிகிச்சை எடுப்பதனால் குணமாக்கலாம்.

தினந்தோறும் சதாவரி பொடியை காலைமாலை சாப்பிடுவதன் மூலம் குணமாக்கலாம்.

 

ஆகவே நண்பர்களே… ஒருவரது செயல்பாட்டினை விமர்சியுங்கள். தனிப்பட்ட விமர்சனங்களை தவிருங்கள்.

 


English Summary
Deepa mustache: Condemnation & solution